கடலூர் மாவட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என பண்ருட்டி அதிமுக கிளை கழக செயலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக சில ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல் வெளியானது..
முன்னாள் கவுன்சிலர்களான திமுகவை சேர்ந்த ஆதிகேசவன், பாலமுருகன் ஆகியோர் வேண்டுமென்றே, இந்த பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாக பண்ருட்டி அதிமுக கிளை கழக செயலாளர் சக்திவேல் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார்..
Discussion about this post