அதிமுக பொதுச்செயலாளரை காப்பி செய்யும் முதல்வர் ஸ்டாலின்..இதில் கூடவா என்று கேள்வியெழுப்பும் மக்கள்..!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொறுப்பேற்ற நாளில் அவர் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தி ஒன்றினை அறிவித்தார். அதிமுகவில் இருக்கும் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது கட்சி உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்ளவும், புதியதாக உறுப்பினர் சேர்க்கையானது நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். இதற்கான செயல்முறையும் படிவமும் ஏப்ரல் 5 ஆம் தேதியிலிருந்து விநியோக்கிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதற்கு முன்பாகவே பல கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், தொண்டர்களும், பொதுமக்களில் சிலரும் தாமாக முன்வந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர்.

இது ஒருபுறம் இருக்க எப்போதும் அதிமுகவைக் காப்பி அடிக்கும் ஒரு கட்சியானது, ஏன் ஒரு கட்சி என்று சொல்லிக்கொண்டு திமுக தான் அந்த பிரதியெடுக்கும் கட்சி என்று உலகம் அறிந்த ஒன்று. அந்த காப்பி கட்சி தற்போது தொண்டர்களை பெருக்க உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற திட்டத்தினைத் தொடங்கியிருக்கிறது. அதுவும் இதனை ஏப்ரல் 4 ஆம் தேதியிருந்து துவங்குகிறதாம். சரியாக பார்த்தால் மார்ச் 27 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஏப்ரல் 5 ஆம் தேதியிலிருந்து அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். உடனே இந்த விடியா திமுக முதல்வர் இன்றைக்கு, ஏப்ரல் 4ல் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதிலும் இரண்டு கோடித் தொண்டர்கள் என்பது அவரின் இலக்காம். தற்போது வரை திமுகவில் ஒரு கோடி தொண்டர்கள்தான் உள்ளார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவின் தொண்டர்படைக்கு அருகே கூட நெருங்க முடியாமல் இருப்பதால் ஸ்டாலின் பயந்துகொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக சில அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

சமூகநீதி, பெண் உரிமை என்றெல்லாம் பேசிவிட்டு அதற்கு நேர்மாறாக இயங்கும் திமுக அரசில் பட்டறிவு உடைய பாமரர்கள் கூட இணைய மாட்டார்கள். இவர்களுக்கு இரண்டு கோடி தொண்டர்கள் என்பது இலக்கா? இலக்கை நிர்ணயிக்கும் முன்பு ஸ்டாலின் யோசிக்கக்கூட மாட்டாரா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதிமுகவின் எல்லா நலத்திட்டங்களையும் காப்பி அடிக்கும் திமுக இந்த விசயத்திலும் காப்பி அடிப்படை விட்டு வைக்கவில்லையா என்று மக்களே கேள்வியெழுப்புகிறார்கள்.

Exit mobile version