விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவினரின் பிரசாரத்துக்காக காத்திருந்த பெண்கள் கலைந்து சென்றதால் யாருமில்லாமல் வெறிச்சோடிய சாலையில் திமுக வேட்பாளர் வாக்குச் சேகரித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அகரம் போன்ற பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிரச்சாரத்தின்போது கூட்டத்தைக் காட்டுவதற்காக திமுகவினர் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களை அழைத்து வந்துள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் வெயியில் காத்திருந்த பெண்கள், இவர்கள் தரும் இருநூறு ரூபாய் பணத்துக்காக எவ்வளவு நேரம்தான் காத்துநிற்பது எனக் கூறியபடி கடுப்பாகிக் கலைந்து சென்றனர். அதன் பின்னரும் பன்னீர்செல்வம் வராததால், வேட்பாளர் புகழேந்தி மட்டும் வெறிச்சோடிய சாலையில் ஒரு சிலருடன் வாகனத்தில் சென்று வாக்குச் சேகரித்தார்.
Discussion about this post