ஜாமீன் மட்டும் இல்லையாம்ணே! கடல்லயே இல்லையாம்! கரூர் உ.பிக்களுக்கு ஜாமீன் Cancel!

பண மோசடியில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கும் செந்தில்பாலாஜியின் நிலை நாம் நன்கு அறிந்த செய்திதான். புழல் சிறைக்கு சென்றிருந்தாலும் எதோ சுவிட்சர்லாந்து டூர் போனது போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார். செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபடுவதற்கு முன்பாகவே, ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது சோதனையில் ஈடுபட வந்த பெண் அதிகாரியை அடித்து கீழே தள்ளினார்கள் கரூர் திமுகவினர். மேலும் ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து சேதம் ஏற்படுத்தினர். அதன்பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திமுக குண்டர்கள் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதனை எதிர்த்து கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் போன்றவற்றை தாக்கல் செய்திருந்தனர்.

தற்போது இந்த வழக்கு நீண்ட நாட்களாக இழுவையில் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது இந்த ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இன்னும் மூன்று நாட்களில் வழக்கில் தொடர்புடையவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version