வாரிசு அமைச்சரோட சனாதன எதிர்ப்பு பேச்ச ஊரே கழுவி ஊத்திட்டு இருக்கு. அதுபோதாதுனு இந்தியா கூட்டணிக்குள்ளயே, பெரிய குழிய தோண்டியிருக்கு வாரிசு அமைச்சரோடு ஸ்டேட்மெண்ட். ஏற்கனவே மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் எல்லாம் உதயநிதிக்கு கண்டனம் தெரிவிச்ச நிலையில, சிவசேனா உத்தவ் தாக்ரே அணி எம்.பி. சஞ்சய் ராவத்தும், அமைச்சரா இருந்துட்டு இப்படி எல்லாம் பேசக்கூடாதுனு உதயநிதிக்கு குட்டு வச்சிருக்காரு.
இந்த நேரம் பார்த்து, திமுக எம்.பி ஆ.ராசா ஒரு படி மேல போய், சனாதான தர்மத்தை எச்ஐவி, தொழுநோயோட கம்பேர் பண்ணி பேசியிருக்காரு. அதுக்காக, அவர் மேல டில்லி போலீஸ் வழக்கு பதிவும் பண்ணியிருக்காங்க…
ஆ.ராசா பேச்ச பார்த்தா, உதயநிதிக்கு முட்டு குடுக்குறதுக்காகவே பேசுன மாதிரியே தெரியுது.. எப்படியும் திமுகவோட அடுத்த தலைவர், துணை முதல்வர் எல்லாம் உதயநிதி தான். அதனால அவர் என்ன பேசுனாலும் மாங்கு மாங்குனு முட்டுக் குடுக்கனுங்குற முடிவுக்கு திமுக சீனியர்கள் எல்லாம்…. அதுல நீ பஸ்ட்டா, நான் பஸ்ட்டான்னு போட்டி போடுறதும் ஆ.ராசாவோட பேச்சுலயே தெரியுதேன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…
Discussion about this post