தமிழகத்தில் பிரிக்கவே முடியாதது எது என்று யாரைக் கேட்டாலும் வரும் முதல் பதிலே, திமுகவும் – ஊழலும் என்பதுதான்… தமிழகத்தில் 1969 முதல் 1976 வரையிலான கருணாநிதி ஆட்சிக்காலம் தொடங்கி, இன்றைய ஸ்டாலினின் ஆட்சி வரை நூற்றுக்கணக்கான ஊழல்களை செய்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.. சர்க்கரை ஆலை, பூச்சி மருந்து ஊழல், வீராணம் ஏரி ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களில் சில வற்றை பார்க்கலாம்..
வீராணம் ஊழல் – தி.மு.க-வின் வரலாற்றில் இன்றளவும் பேசப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது இது. 1970-களில் சென்னை மாநகரத்தின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக பல்வேறு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், இந்தத் துறையில் முன்னனுபவமே இல்லாத, கருணாநிதி, முரசொலி மாறனுக்கு நெருங்கிய நண்பரான சத்யநாராயணனின் நிறுவனத்துக்கு டெண்டரை உறுதி செய்யவே, இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1970-களில் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய்….
அதேபோல 1970 ம்ஆண்டு இந்தியாவையே அதிரவைத்தது பூச்சி மருந்து ஊழல் – மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசு, இந்தியா முழுவதும் உள்ள விவசாய நிலங்களைப் பூச்சிகளில் இருந்து பாதுகாப்பதற்காக நாடு முழுவதும், தனியார் நிறுவனங்களின் வாயிலாகப் பூச்சி மருத்து அடிக்கும் திட்டத்தை அமல்படுத்தியது. அப்போது தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியும் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரும், தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்-ன் தாத்தாவுமான அன்பில் தர்மலிங்கத்தின் வாயிலாக ஏக்கருக்கு இத்தனை சதவிகிதம் என கமிஷன் பேசப்பட்டு இறுதியில் கமிஷன் வழங்கிய நிறுவனத்துக்கே திட்டம் உறுதி செய்யப்பட்டது என்பதே குற்றச்சாட்டு. சர்க்காரியா சமர்ப்பித்த அறிக்கையில், “ஊழல் நடந்திருக்கிறது , ஆனால் அவை விஞ்ஞானபூர்வமாக நடந்திருப்பதால் அவற்றை நிரூபிக்கச் சாட்சிகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை ” எனப் பதிவு செய்தார். இதுவே பிற்காலத்தில் தி.மு.க-வுக்கு விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்யும் கட்சி என்ற நிலையான பெயரை வாங்கித்தந்தது
அடுத்தது இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஊழல் – இந்த 2 ஜி ஊழல் புகாரில் மத்திய அரசுக்கு இழப்பு என்று குற்றம்சாட்டப்பட்ட தொகை மட்டுமே ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய். 2010 மே 6-ம் தேதி ஆ.ராசா மற்றும் நீரா ராடியா இடையேயான உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியான நாள், இந்திய ஜனநாயகம் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளான தருணம். பின்னாட்களில் அந்த உரையாடலில் ஈடுபட்ட இருவருமே 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குப் புகாரிலும் சிக்கினர். கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டது இன்று வரை திமுகவின் மிகப்பெரும் வரலாற்று சாதனை..
அலைக்காற்றை ஒதுக்கீட்டில், முறைகேடு செய்து, 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்ற சி.ஏ.ஜி-யின் அறிக்கையையால் உலகமே அதிர்ந்தது …
2001 ஜூலை 29-ம் தேதி சென்னையின் மேம்பாலங்களைக் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்தார் சென்னை மாநகரத்தின் ஆணையராக இருந்த பி.வி. ஆச்சாரியாலு. அதனையடுத்து, 2001 ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி அதிகாலை முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் 1996 இருந்து 2001 வரை தி.மு.க ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில், சென்னை மாநகர மேயராக இருந்தவர் ஸ்டாலின். அப்போது சென்னையில் 9 புதிய பாலங்கள் கட்டுவதற்கு முறைகேடான முறையில் தமிழக அரசு நிதி ஒதுக்கியதாகவும், இதன் மூலம் அரசுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கோ.சி.மணி, முன்னாள் தலைமைச்செயலாளர் நம்பியார் மற்றும் முன்னாள் மேயர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவைபோக, கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம், மேகலா பிக்சர்ஸ் ஊழல், அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல், டிராக்டர் ஊழல், திருவாரூர் வீட்டு ஊழல், ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல், சமயநல்லூர் மின்திட்ட ஊழல், குளோப் திரையரங்கு வாடகை சட்டத்திருத்த ஊழல், சர்க்கரை ஆலை ஊழல் என ஊழல் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த உருவமுமே திமுகதான் என்பதற்கு இவையெல்லாம் வரலாற்றுச் சான்றுகள்…
இவற்றோடு, தற்போது ஸ்டாலின் தலைமியிலான ஆட்சியும் இதற்கெல்லாம் சளைத்ததில்லை என்று நிரூபணம் ஆகியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஆடியோ வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தினார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்..
இந்த லிஸ்ட்டில், தற்போது செந்தில்பாலாஜியின் டாஸ்மாக் ஊழல், பாட்டிலுக்கு 10ரூபாய் ஊழல், மின்சாரத்துறை ஊழல் எல்லாம் இணைந்திருக்கிறது..
Discussion about this post