ஒரு வெற்றிகரமான தலைவன் என்பவன், பதவிக்காக மட்டும் இருப்பவன் அல்ல. கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி தொண்டர்களுக்கும் உதாரணமாக திகழ வேண்டும். ஆனால் தற்போது உள்ள திமுக கட்சியில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக தான் செயல்படுகிறார்கள் என்பதை, ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்பட்டதில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. திமுகவும் ரவுடிசத்திற்கும் எப்போதுமே தொடர்பு உண்டு என்று அந்த கட்சி தொண்டர்கள் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள்.
2018 ஆகஸ்ட் 29 ஆம் தேதி
கன்னியாகுமரியில் சுதா அமர்சிங் என்கின்ற தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் நாகர்கோயில் அருகே உள்ள மருங்கூரில் ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டு முடித்து அவரிடம் பில் தரப்பட்டபோது பணம் தராமல், தி.மு.க பிரமுகர் சுதா அமர்சிங் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காண்பித்து ஓட்டல் ஊழியர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது
2018 ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருச்சி திருவெறும்பூரில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ துரையின் பேரன் ராம் பிரசாத் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தததற்காக கைது செய்யப்பட்டார்.
2018 செப், 12 ஆம் தேதி பியூட்டிபார்லரில் திமுக முன்னாள் கவுன்சிலர் ஈவு இரக்கமின்றி ஒரு பெண்ணை கொடூரமாகத் தாக்கிய ரவுடித்தனம் செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
2018 செப்,15 ஆம் தேதி வட சென்னை ஆர் கே நகர் பகுதியில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தங்கபாண்டியன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.இந்த உணவகத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்களான யுவராஜ் , தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்டவரை தி.மு.க.வின் அப்போதைய செயல் தலைவரும் தற்போதைய தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
நேற்று கூட தாம்பரம் நகராட்சியில் பொறியியல் பிரிவு பணி ஆய்வாளராக பணி புரிந்து வரும், ருத்ர மூர்த்தி, நேற்று ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு நகராட்சி அலுவலகத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த திமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரகுநாதன் என்பவர், குருமூர்த்தியை ஆபாசமாக பேசியதுடன், காலணியால் அடித்தது அரசு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதேபோலத்தான் பிரியாணிக்கடை தொடங்கி இவர்களது பிரசாரக்கூட்டம் வரை ரவுடித்தனம் தான் தலைவிரித்தாடுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போதே திமுக இப்படி ரவுடிசத்தை கட்டவிழ்த்துவிடுகிறது என்றால் இன்னும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வார்கள் என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
Discussion about this post