தனியார் திருமண மண்டபங்களில் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் மட்டுமே திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்த முடிகிறது அதை தவிர்க்கும் வகையில் தான் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் சமூக நலக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது எளிய முறையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய பொதுமக்கள் சமூக நலக்கூடங்களை நாடி வருகின்றனர் மிக மிக குறைந்த கட்டணத்தில் சமூக நலக்கூடங்கள் செயல்பட்டு வந்தாலும் சென்னை முழுவதும் தற்போது சமூக நலக்கூடங்கள் திமுகவின் கூடாரமாக மாறிவிட்டது சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள சமூக நலக்கூடங்கள் அந்தந்த திமுக பொறுப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது சமூக நலக்கூடம் மாநகராட்சி சார்பில் குறைந்த கட்டணம் வசூலித்தாலும் அந்த சமூக நலக்கூடங்களில் டெக்கரேஷன் சமையல் உள்ளிட்ட அனைத்து காண்ட்ராக்ட்களும் திமுகவினர் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது பொதுமக்கள் சமூக நலக்கூடங்களை நாடும்போது தனியார் திருமண மண்டபங்களுக்கு நிகரான கட்டணங்களை திமுகவினர் வசூலித்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியாகும் கடந்த 12 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஸ்டாலின் அந்த தொகுதிக்கு எந்த நலனும் செய்யவில்லை குறிப்பாக திரு வி க நகர் பேருந்து நிலையம் எதிரில் மாநகராட்சி சமூக நலக்கூடம் கட்டப்பட்டு ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இந்த சமூக நலக் கூடத்திற்கு ஒரு நாள் வாடகையாக 27140 ரூபாய் சென்னை மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது அதே போல் அரை நாள் வாடகைக்கு 13570 ரூபாய் வசூலிக்கப்படுகிறது ஆனால் நிகழ்ச்சிக்கு தேவையான டெக்கரேஷன் சமையல் சேர் டேபிள் என அனைத்திற்கும் விலைப்பட்டியல் போட்டு வசூலிக்கப்படுகிறது குறிப்பாக கொளத்தூர் பகுதி செயலாளராக இருக்கும் ஐ சி எப் முரளி தலைமையில் தான் இந்த சமூக நலக்கூடம் செயல்பட்டு வருகிறது இவர் தலைமையில் தான் திமுகவினர் இந்த சமூக நலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
திருமணத்திற்கான மலர் டெக்கரேஷனுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது இதைப்போல நிகழ்ச்சிக்கான சமையல் பாத்திரங்கள் சமையலுக்கான கான்ட்ராக்ட் என அனைத்துமே திமுக நிர்வாகிகள் மட்டுமே கொடுக்கின்றன வரக்கூடிய நிகழ்ச்சி நடத்தக்கூடியவர்களுக்கு இந்த சமூக நலக் கூடத்தில் நாங்கள் சொல்லும் டெக்கரேஷன் சமையல் கான்ட்ராக்ட் கொடுத்தால் மட்டுமே மண்டபம் புக் செய்ய முடியும் இல்லை என்றால் உங்களுக்கு இந்த சமூக நலக்கூடம் நிகழ்ச்சி நடத்துவதற்கு கொடுக்க முடியாது என கறாராக கூறிவிடுகிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஸ்டாலின் தொகுதியிலேயே இது போன்ற நிலை என்றால் மற்ற பகுதியில் எந்த நிலை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் மாநகராட்சி சமூக நலக்கூடத்திற்கு நிகழ்ச்சிக்காக செல்பவர்கள் இவர்கள் கூறும் பட்டியலை பார்த்து தலைக்கறிக்க ஓடக்கூடிய நிலைதான் இருந்து வருகிறது தனியார் திருமண மண்டபங்களுக்கு நிகராகவும் அதற்கு அதிகமாகவும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர் இதுபோல முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இது போன்ற அநியாயங்கள் நடைபெற்று வருவது தான் ஏழை எளிய மக்கள் சமூக நலக்கூடங்களில் நிகழ்ச்சி நடத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் தன் தொகுதியை பற்றிய தெரியாமல் பேசாமல் அடைந்தையாக இருந்து வருவது தான் திராவிட மாடல் ஆட்சியாக இருக்கிறது.
Discussion about this post