தமிழக அரசு கொரோனாப் பரவலைத் தடுப்பதற்காக, அரசு தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மக்களுக்குப் பயனுள்ள எந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டாலும், எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அறிவிப்பு வெளியிடுவதும், வீதியில் தேவையில்லாமல் போராடுவதையும் திமுக வழக்கமாக வைத்துள்ளது.
இந்நிலையில் ஸ்டாலின் அறிவுத்தலின் படி தி.மு.க.வினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு உத்தரவை மீறி கிராம சபைக் கூட்டத்தை நடத்தினர். “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்று திமுகவினரின் உளறல்களை கேட்பதற்கு மக்கள் தயாராக இல்லை.
வராத மக்களை கூட்டுவதற்கு மக்களின் ஏழ்மையை பயன்படுத்துவது தி.மு.க.விற்கு கைவந்த கலை… விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டது. இதில் தலைக்கு 100 ரூபாய் என்று பெண்களுக்கு கொடுத்து கூட்டத்தை கூட்டியிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. நோய் பரவலை தமிழக அரசு தடுக்க போராடினால், தி.மு.க.-வின் அடாவடி தனத்தால் மக்களை பிரச்சனைக்குள்ளாக்கும் போக்கு தமிழக மக்களிடையே எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
Discussion about this post