திராவிட முன்னேற்றக் கழகம் என்பது போய் திருடும் முன்னேற்றக் கழகம் என்று மாறி வருகிறது இன்றைய விடியா திமுக. ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் மற்றும் எப்படி மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்ற நோக்கில்தான் திமுகவானது இயங்குகிறது. ஆனால் இறுதிவரை மக்களை முன்னேற்றும் எந்த திட்டத்தினையும் செயல்படுத்த மாட்டோம், வேண்டுமென்றால் மக்களிடம் இருந்து திருடிக்கொள்கிறோம் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் திமுகவினர். மக்களிடம் திருடியது போக தற்போது மணலையும் திருடுவதில் கை தேர்ந்தவர்களாக மாறிவிட்டார்கள்.
நெய்வேலி என்.எல்.சி மணலைத் திருடிய திமுகக்காரர்..!
ஏற்கனவே அம்பாசமுத்திரம் விஏஓ ஒருவர், மணல் அள்ளியதைத் தடுக்க முயன்றதால் திமுகவைச் சேர்ந்தவரால் கொல்லப்பட்டார் என்பது ஊரறிந்த உண்மை. தற்போது நெய்வேலியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கழக துணைச் செயலாளர் ஒருவர் நெய்வேலி என்எல்சி சுரங்க மணல் மேட்டில் இருந்து, மணலைத் திருடியுள்ளார். இது குறித்தான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெட்டப்படும் மண்ணானது, மலைபோல் ஊமங்கலம், ஊத்தங்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை திமுக ஒன்றிய கழக துணைச்செயலாளர் கணேசன் ஊமங்கலம் கிராமத்தில் உள்ள காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள மணல்மேட்டில் கிராவலிலிருந்து மண்ணை பிரித்தெடுக்கும் கம்பெனியை நடத்தி வரும் நிலையில், நெய்வேலி என்.எல்.சி மண்ணை லாரியின் மூலம் கடத்தி வந்து மண்ணை பிரித்தெடுத்து என்.எல்.சி மண்ணை லாரியின் மூலம் கடத்தி வந்து, மண்ணை பிரித்தெடுத்து பத்தாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து புகாரானது தற்போது எழுந்துள்ளது. மேலும் என்.எல்.சி மண்ணை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் லாரியில் திருடும் புகைப்படம் மற்றும் திமுக பிரமுகர் நடத்தி வரும் கம்பெனியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் என்.எல்.சி மண்ணை திருடி விற்பனை செய்யும், திமுக பிரமுகரான கணேசனை என்.எல்.சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Discussion about this post