புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆட்சியர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இந்நிலையில், விழாவில் கலந்துகொள்வதற்காக ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த திமுக எம்பி அப்துல்லா, விதிகளின்படி தனக்கு இருக்கை ஒதுக்கவில்லை என கூறி, விழாவினை புறக்கணித்து விட்டு காரில் ஏறிச் சென்றார். இருக்கை ஒதுக்கப்படாமல் இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்தின் படி பதவி ஏற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள், குடியரசு தின விழாவில் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், விழாவை புறக்கணித்து சென்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post