காஞ்சிபுரம் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிரசன், தனது ஆதரவாளர்களுடன் சென்று, அறையை மூடி மருத்துவத்துறை துணை இயக்குநரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் – அரசு தலைமை மருத்துவமனையில் இணை இயக்குநர் மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகம் அளிப்பது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த அறைக்குள் தனது ஆதரவாளர்களுடன், அத்துமீறி நுழைந்த காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன், அந்த அறையை மூடி,
சுகாதாரத்துறை துணை இயக்குநரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பதற்றநிலை காணப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அம்மா தாய் சேய் நல பெட்டகத்தை அனுமதியின்றி அவர்கள் எடுத்து சென்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Discussion about this post