தமிழக சட்டசபையில் சிறிது நாட்களுக்கு முன்பு விடியா திமுக அரசால் ஆளுநர் அவமரியாதை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசும்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்ற கூற்றிற்கு ஒப்பாக திமுக நிர்வாகிகளும் ஆங்காங்கே மேடையில் தமிழக ஆளுநரை ஒருமையில் பேசி வருகிறார்கள். இப்படித் தொடர்ந்து பேசி வருவது சமீபமாக எல்லைமீறி போய் உள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் மேடைப்பேச்சு ஒன்றில் திமுகவின் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மிகவும் மோசமாகவும் தரைகுறைவாகவும் தமிழக ஆளுநரைக் குறித்து பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. “ஆளுநரைக் கொல்லுவேன்” என்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த அற்பத்தனமான பேச்சினை பேசிய அவர்மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆளுநரின் செயலாளர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பாக காவல்துறையில் முறையாக தமிழக ஆளுநர் தரப்பிலிருந்து புகார் அளித்திருந்தார்கள். ஆனால் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையினைக் கையில் வைத்துக்கொண்டு ஆளும் விடியா அரசின் அராஜகப் போக்கினை இச்சம்பவம் வெளிக்காட்டியுள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிரான வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆளுநரை அவமரியாதை செய்யும் விடியா அரசின் நிர்வாகிகளுக்கு இவ்வழக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post