நாகை அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் பெண் நிர்வாகியை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. பாட்டாளி மக்கள் கட்சியின் இளம்பெண்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திமுகவினர் கார்த்தி, சுரேந்தர், இளங்கோ ஆகிய 3 பேரும் சங்கீதாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சங்கீதா நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் வேதாமுகுந்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post