வாக்களர்களுக்கு பணம் கொடுத்ததாக வந்த புகாரையடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுகிறார். இதனையடுத்து தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தனது கூட்டணி கட்சியினருடன் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அவர் பிரசாரம் செய்த போது, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். அந்தப் பெண்களுக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பணம் வழங்கினார். தேர்தல் விதிமுறைகள் மீறியதாக 143, 171(E), 171(H) உள்ளிட்ட பிரிவுகளில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் தோட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
Discussion about this post