ஜி.எஸ்.டி. வரி நடைமுறைப்படுத்தப்பட்டதால் தமிழகத்திற்குத் தரவேண்டிய இழப்பீடாக 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், கூடுதல் வரி விதிக்கப்பட்டால் தமிழக அரசு அதை எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post