9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பதவிக்கு ஏற்றாற்போல் பேச வேண்டும் எனச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். மேலும் தன்னைப் பற்றிய தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவதற்கு மு.க.ஸ்டாலினுக்குத் தகுதியில்லை எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் சாடினார்.