திமுக தலைமைப் பற்றியும் அமைச்சர்கள் பற்றியும் கோவை மாவட்ட திமுக செயலர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி கட்சி வட்டாரத்தில் ஒரு கிலியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட திமுக செயலாளரான கார்த்திக், கடந்த ஐந்தாண்டில் கோவை மாவட்டத்திலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.எல்.ஏ ஆவார்.
கடுப்பான திமுக செயலர்..!
இந்த தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டிருந்தது. ஆனால் அவர் படுதோல்வி அடைந்தார். முக்கியமாக கோயமுத்தூரை எடுத்துக்கொண்டால் திமுக தான் போட்டியிட்ட பத்துத் தொகுதியிலும் படுதோல்வி அடைந்தது. கோயமுத்தூர் என்பது அதிமுகவின் எஃகு கோட்டை. அப்படி அதிமுகவுடன் மோதி படுதோல்வியை திமுக கடந்த தேர்தலில் சந்தித்தது. இதனால் மாவட்ட் நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டனர். ஆனால் தோற்றாலும் மாற்றப்படதா ஒரே ஆள் கார்த்திக் தான். இவரது மனைவியையும் அரசியலில் இறக்கியிருந்தார் கார்த்திக். அவரது மனைவி இளஞ்செல்வி கோவை மாவட்டம் கிழக்கு மண்டலத் தலைவராக உள்ளார். அவருக்குத் தான் இந்த முறை கோவை மாவட்டம் மேயர் பதவி என்று பேசப்பட்டு வந்த நிலையில் கல்பனா ஆனந்த குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனால் வன்கடுப்பில் இருந்த கார்த்திக் அவ்வப்போது கட்சித் தலைமையையும் மாவட்ட பொறுப்பு அமைச்சரையும் திட்டி மற்றும் விமர்சனம் செய்து வந்துகொண்டிருந்தார். அது பெரும்பாலும் வெளியில் வராமல் இருந்தது. தற்போது அவர் மற்றொருவருடன் தொலைபெசியில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.
கிழித்தெடுத்த திமுக மாவட்ட செயலர்..!
ஒரு வீட்டுக்கு பத்து வாசல் இருக்கக்கூடாது. அரசியலில் முதல்வர் ஸ்டாலின் தான் முடிவிடுப்பவராக இருக்க வேண்டும். அதிமுகவைப் பொறுத்தவரையும் அங்கு ஒருவர்தான் முடிவெடுப்பார். எந்த முடிவாக இருந்தாலும் ஜெயலலிதாதான் முடிவெடுப்பார். தவறு செய்திருந்தால் அதிரடியாக நூறுபேரை கட்சியிலிருந்து நீக்குவார். அந்த அறிவிப்பும் அவர் பெயரில்தான் வரும். ஆனால் இங்கு அப்படி இல்லை. அண்ணாநகர் கார்த்திக் இருக்காரே.. அவருடைய வீட்டில் காலையில் இருநூறு பேர் கீழ நிப்பானுக.. மேல மீட்டிங்ல இருக்கார்னு சொல்வாங்க.. பாத்தா எக்சர்சைஸ் பண்ணிட்டுருப்பாரு. எந்திக்கிறதே எட்டரை மணிக்குதான்..எக்சர்சைஸ் பத்தரை மணி வரை பண்ணுவாரு.. பிசினஸ் பண்ற ஆளுங்க மட்டும் மேல போய் எக்சர்சைஆச் பண்ணப் பண்ண டெண்டர் விஷயமாகப் பேசுவார். அதற்கு பின் குளிச்சு கிளம்பி 11:30 மணிக்கு தான் கீழயே வருவாரு.. அவர் ஒரு பவர் சென்டர்.
அண்ணா நகர் கார்த்திக்கை கழுவி ஊத்திவிட்டு மகேஷ் பொய்யாமொழிக்கு பேச்சு திரும்பியது. மகேஷ் பொய்யாமொழி திருச்சியில எங்க தங்கியிருக்காருனு கட்சிக்காரனுக்கே தெரியாது. நேருவ கூட பாத்துரலாம் மகேஷ பாக்குறது கஷ்டம். இதெல்லாம் சரி செய்யணும். பொதுமக்கள் இதை கூர்ந்து கவனிக்கின்றனர். கோவையில் திமுக செல்வாக்கோட இருக்கணும்-னா கோவையை ஆண் மேயரிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்ப தான் கட்சி நிக்கும். கட்சியை அப்பதான் டெவலப் பண்ண முடியும். அதுக்கேத்த மாதிரி லிமிட்டேசன் பண்ணிருக்கணும். கீழ இருக்குற, 100 கவுன்சிலரை வச்சு டெவலப் பண்ண முடியாது.
கோவைல திமுக நிக்கனும்னா..!
ஆட்சிக்கு வந்த உடனே முதல்வர் இதை ஒப்புக்கொண்டார். மாவட்ட செயலர்களெல்லாம் லிஸ்ட் கொடுங்க என்று கேட்டார். நேரு தான் அதை மாற்றினார். நேரு எப்போதும் நுனிப்புல்தான் மேய்வார். எல்லா தோட்டத்துலயும் மேய்ஞ்சிட்டே ஓடிட்டி இருப்பாரு. அவர், “ப்ராப்பரா” பண்ணலை. அப்பிடிப் பண்ணிருந்தா நாலு மாசத்துடல், “டீலிமிட்டேஷன் முடிஞ்சிருக்கும். மேயரா என் மனைவி வரணும்னு இல்லை. யார் வேளும்னாலும் வரலாம்.. ஆனா கோயம்புத்தூர் மாதிரி ஒரு ஊர்ல பெண் மேயரை வச்சு கட்சியில என்ன சாதிச்சிர முடியும்னு கேக்குறேன். பத்து எம்.எல்.ஏ-விற்கு பதில் கொடுக்கணும். ஒரு பெண் மேயரால 10 எம்.எல்.ஏவுக்கு எப்படி பதில் கொடுக்க முடியும்.. அவர்களை எப்படி பேஸ் பண்ண முடியும்?
என்ன தான் நாங்க பக்கத்துல இருந்தாலும், பேச முடியாது. பேசினால், “இவர் மேயரா அவர் மேயரா”ன்னு கிழிப்பாங்க. பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது.. அப்பிடி இருந்தா கட்சியை வளர்க்கெவே முடியாது. இவ்வாறு ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.