விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு திமுகவே சான்று – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு திமுகவே சான்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.மதுரையில் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும் மைதானத்தில், மாநாடு குறித்த அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், வரகூர்.அருணாச்சலம், என்.ஆர்.சிவபதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், ரத்தினவேல், ரத்ன சபாபதி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஜக்கையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், வி.பி.பரமசிவம் மற்றும் முன்னாள் எம்.எ.ஏ மணிகண்டன் வளர்மதி, உலக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோர் தலைமை தாங்கினர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு திமுகவே சான்று என குற்றம் சாட்டினார்.அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், அதிமுக சார்பில் கழக பொதுச்செயலாளர் தலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாடு வரலாற்று சிறப்புமிக்க, கின்னஸ் சாதனை படைக்கக்கூடிய மாநாடாக அமையும் என தெரிவித்தார்.

Exit mobile version