ஆபாச நடனங்கள் நடத்தி ஆட்களை சேர்த்த திமுகவினர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆபாச நடனங்கள் நடத்தி உதயநிதி ஸ்டாலினின் பிரசாரக் கூட்டத்திற்கு ஆட்களை சேர்த்த செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

திருவெறும்பூரை அடுத்த குண்டூரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக அவர் வருகை தருவதற்கு கால தாமதம் ஆனதால், கூட்டத்தினர் கலைந்து விடாமல் இருப்பதற்காக ஆபாச வசனங்கள் மற்றும் நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த ஆபாச காட்சிகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பும் செய்யப்பட்டன.

இந்த வரம்பு மீறிய செயலைக் கண்டு பொதுமக்கள் முகம் சுளித்தனர். மேலும் உதயநிதியின் வருகைக்காக திமுகவினர் சாலைகளை மறித்ததால் அப்பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Exit mobile version