புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆனால் 2016 தேர்தல் அறிக்கையில் இதே சட்டங்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்துவோம் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது. திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். திடீர் விவசாயியான திமுகவின் ஸ்டாலினும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் பாருங்கள், எந்த சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் இன்று முஷ்டி முழக்கி பேசி வருகிறாரோ, அதே சட்டத்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவோம் என்று 2016 தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டுள்ளது. உங்களால் நம்ப முடியவில்லையா.. இதோ பாருங்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையை.
வேளாண் உற்பத்திக் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்,உற்பத்தியாளரையும், வாங்குபவரையும் இணைப்பதற்கு அரசும், உற்பத்தியாளர்களும் இணைந்து நிர்வகிக்கும் வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும் என்பது முதலாவது வாக்குறுதி.
இந்த புதிய அமைப்பின் மூலம் சந்தையின் விலை நிலவரங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளவும், புதுப்பிக்கவும் ஏற்ற வகையில் வேளாண் விளைபொருள் விற்பனை ஒழுங்கு முறைச் சட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்பது 2-வது வாக்குறுதி.
இந்த இரண்டு வாக்குறுதிகளும் கூறுவது என்ன? இந்த வாக்குறுதிகளுக்கு பொருள் என்ன? வேளாண் திருத்தச் சட்டங்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்துவோம் என்பதுதானே… அப்போது அப்படி கூறிவிட்டு இன்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதற்கு பெயர் இரட்டை நாக்கு அல்லாமல் வேறென்ன? துண்டுச்சீட்டில் எழுதித் தருவதையே ஒழுங்காக படிக்கத் தெரியாத ஒருவர், எப்படி தேர்தல் அறிக்கையை படித்திருப்பார்…
இந்த போலி விவசாயி ஸ்டாலினின் முகத்திரையைத் தான் உண்மையான விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செல்லுமிடமெல்லாம் கிழித்து எறிந்து வருகிறார். தமிழக விவசாயிகளே, கபட வேடதாரியான ஸ்டாலின் திடீர் ஆதரவைப் பார்க்கும் முன்னர் திமுகவின் 2016 தேர்தல் வாக்குறுதியை பார்த்து விடுங்கள்.
Discussion about this post