நெற்பயிர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை திடீரென ரத்து செய்த திமுக அரசுக்கு, கடலூர் மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நெற்பயிருக்கான காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்ததில் உள்நோக்கம் உள்ளதாக கூறியுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், திமுக அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால், விவசாயிகள் அதிகளவில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக அரசு, விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக, நெல்லுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையைக் கட்ட இயலாது என்று அறிவித்துள்ளது.
இதனால், விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில், பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் போது வராத நிதிச்சுமை 100 நாள் திமுக ஆட்சியில் எப்படி வந்தது என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
விவசாயத்தை காத்திட, விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் என்று மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி விவசாயம் செய்தால், விவசாயிகளை மீண்டும் தற்கொலைக்கு தூண்டும் விதமாக, திமுக அரசு செயல்படுவதாக வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
நெல்லுக்கான பயிர் காப்பீட்டு தொகை கட்ட இயலாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால், மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் கருத்துகளை கேட்காமலும், சட்டமன்றத்தில் விவாதிக்காமலும் நெற்பயிர் காப்பீட்டு திட்டத்தை, திமுக அரசு தன்னிச்சையாக ரத்து செய்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டை அவசரமாக திமுக அரசு ரத்து செய்ததில் உள்நோக்கம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Discussion about this post