எதிர்க்கட்சித் தலைவர் சட்டப்பேரவையில் பேசியவை :
20 ஆண்டு காலமாக ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று போராட்டம் நடைபெற்ற வந்தது. அதிமுக ஆட்சியில்தான் போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கக் கூடாது. தூத்துக்குடி சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பே அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்துவதால் தான் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது. தற்போதைய அமைச்சராக கீதா ஜீவன் கடந்த ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் கலந்து கொண்டார். 144 தடை உத்தரவு போடப்பட்டபோது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி அந்த போராட்டத்திற்கு செல்லலாம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுகாதார போராட்டக்காரர் நடத்தியவர்கள் 14 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டதால் தான் தற்போது வரை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை துவங்குவதற்கு நிலம் கொடுத்தது திமுக அரசு. மீண்டும் 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது அதிமுக அரசு. திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட ஏழை எளிய தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காக போராடியவர்கள் தடியடிக்க பயந்து ஆற்றில் விழுந்து 17 பேர் திமுக ஆட்சியில் தான்.
ஒவ்வொரு ஆட்சியிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் மட்டும்தான் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறுவது தவறு. கொடநாடு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கொடும் குற்றம் புரிந்தவர் முதலமைச்சர் புகைப்படம் எடுத்துள்ளார். கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு இந்த ஆட்சியில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நீதிமன்றம் செயல்படவில்லை சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை. கொடநாடு சம்பவத்த தொடர்பாக சிபிஐ விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்ற வருகிறது ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற விசாரணையை தொழில் சதவீதம் முடிவடைந்ததாக கூறிவிட்டு பின்பு ஏன் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றினீர்கள்.
Discussion about this post