தமிழ்நாடு முழுவதும் கடந்த திங்கள் கிழமையிலிருந்து தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருவது ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீதான வருமானவரி சோதனை ஆகும். இந்த நிறுவனத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பு உண்டு என்பது உலகறிந்த உண்மை. ஆனால் இதனை ஜி ஸ்கொயர் நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் எங்களுக்கும் திமுகவிற்கும் சம்பந்தம் இல்லை என்று குறிப்பிட்டுருந்தது. ஆனால் வருமான வரி சோதனை செய்யப்பட்ட இடங்கள் எல்லாம் திமுகவினருக்கு உரியது ஆகும். முக்கியமாக திமுக எம் எல் ஏ மோகன் மற்றும் அவரது மகன் அண்ணாநகர் கார்த்திக் ஆகியோரின் பங்களாவில் வருமான வரிசோதனை நடைபெற்றது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சரி இதெல்லாம் போகட்டும். நேற்றைக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் திமுகவின் விளையாட்டுத் துறை அமைச்சரும் பட்டத்து இளவரசருமான உதயநிதி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “வருமான வரி சோதனைகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது” என்று சொல்லியிருக்கிறார். ஊரில் ஒரு பழமொழி உண்டு. தவளைத் தன் வாயால் கெடுமாம். அதுபோல உதயநிதியும் உளறிவிட்டார். திமுகவிற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறது ஜி ஸ்கொயர். வருமானவரி சோதனை மூலம் திமுகவை அச்சுறுத்து முடியாது என்கிறார் உதயநிதி. அப்படியென்றால் இரண்டுக்கும் தொடர்பு உள்ளது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது அல்லவா. தமிழக முதல்வர் கூட தற்போது டெல்லி பயணம் மேற்கொண்டது அவரது மாப்பிள்ளை மற்றும் மகளுக்காகத் தான் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கதைக்கின்றன. ஒருவேளை இதுதான் மகளதிகாரமா?