மருத்துவம் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவையை அலட்சியபடுத்தும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நடந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னலம் பாராது 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நேற்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டினர். குடியரசு தலைவர், முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் , பொதுமக்கள் என பல தரப்பினரும் கைதட்டி நன்றிகளை அர்ப்பணித்தனர்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினோ, அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களோ கைதட்டி நன்றி தெரிவிக்கவில்லை. திமுகவினர் தான் என்றில்லை, காங்கிரஸ், மதிமுக, விசிக என அவர்களின் கூட்டணிக்கட்சியினர் கூட சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்காமல் புறக்கணித்தனர். காங்கிரஸ் தலைமையான சோனியா, ராகுல் கூட கைதட்டி நன்றி தெரிவிக்கவில்லை. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்ததாகவும், 8 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், பொய்யான தகவலை டிவிட்டரில் பதிவு செய்தார் ஸ்டாலின். இதுபோல தவறான தகவல்களை பரப்பி பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்க வேண்டாம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார். அதே போல கொரோனா விஷயத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். எதிர் கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலின் இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்துகொள்ளலாமா என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post