ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் முழு மனதோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு போக முடியாத நிலையில் இருக்கிறார். திமுகவினர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு, மின்சார கண்டனம், சொத்து வரி, பால் விலை, குடிநீர் வரி ஆகியவற்றை கடுமையாக உயர்த்தி உள்ளனர். இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் நேரடியாக களத்திற்கு சென்று வாக்கு சேகரிக்க முடியாது என்பதால், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது டூப்பு போட்டு, வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் வினோதக் காட்சியை திமுகவினர் நடத்தி வருகின்றனர். மக்கள் விரட்டி அடிக்க கூடாது என்பதற்காக புதிய உத்தியை கையாள்வதாக திமுக உடன்பிறப்புக்களே மார்தட்டி கொள்கின்றனர்.
Discussion about this post