2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் திமுகவின் பொய் தேர்தல் வாக்குறுதிகளும் அவர்கள் செய்தவைகளும் பின்வருமாறு உள்ளன.
1. திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அனைத்தும் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
2. நீட் தேர்வு ஒழிக்கப்படும்.
3. டாஸ்மார்க் கடைகள் மூடப்படும்.
4. காஸ் சிலிண்டர் ரூ 100 குறைக்ப்படும்.
5. குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும்.
6. அரசு துறைகளில் ஒப்பந்த முறையே இருக்காது.
7. அங்கன் வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
8. MRB செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
9. TET ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.
10. அரசு இடை நிலைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
11. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.
இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இவற்றில் 85% வாக்குறுதிகளை நிறைவேற்றியாயிற்று என்று காதில் பூ சுற்றிக்கொண்டிருக்கிறார். மேலே குறிப்பிட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட சரிவர நிறைவேற்றவில்லை இந்த விடியாத அரசு.
ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு திமுக செய்தவை என்னென்ன வாங்க பார்க்கலாம்.
1. ஆவின் பால் விலை உயர்வு இதனால் அனைத்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்தது.
2. பஸ் கட்டண விலையை உயர்த்தி விட்டு மகளிருக்கு டவுண் பஸ் இலவச பயணம்.
3. டாஸ்மார்க் கடைகளை மூடுவோம் என கூறி விட்டு ஆட்சிக்கு வந்ததும் கடைகளை மூடாமல் பொருட்களின் விலையை உயர்த்தியது.
4. மின்சார கட்டண விலை உயர்வு.
5. குடிநீர் வரி, குடி நீர் இணைப்பு கட்டண உயர்வு.
6. சொத்துவரி வீட்டு வரி உயர்வு.
7 .கட்டுமான பொருட்கள் விலை உயர்வு.
8. அரசு வேலையை கொடுக்காமல் தனியர் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வேலை கொடுத்ததாக நாடகம்.
9. திமுக அரசு பதவி ஏற்ற பிறகு ஒரு அரசு புதிய பணியிடம் கூட உருவாக்கப்படவில்லை.
10. அரசு ஓய்வு பெற்றவர்களின் பணி இடங்களில் ஒருவர் கூட நிரப்பப்படவில்லை.
11. ஒப்பந்த முறையை ஊக்குவிக்கும் திமுக அரசு இதனால் அரசு வேலை கிடைப்பதில் இனி இளைஞர்களுக்கு திண்டாட்டம் தான்.
12. அரசு துறைகளில் எந்த கோப்புகளும் அடுத்த நகர்வினை எட்டவில்லை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இப்படி மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கும் விடியாத ஆட்சி நமக்குத் தேவைதானா என்று மக்கள் எண்ணத் தொடங்கிவிட்டார்கள். தேர்தலுக்கு முன் ஒரு பொய், பிறகு மக்களிடம் இருந்து வசூலிக்கிறார்கள் அதிக வரியாக மொய்.