விக்கிரவாண்டி இடைதேர்தலில் பணம் மற்றும் பிரியாணிக்காக திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முட்டத்தூர் வாக்குச்சாவடி மையம் அருகே முறையாக பணம் வழங்கப்படவில்லை என்றும், பிரியாணி கொடுக்கவில்லை என்றும் திமுக நிர்வாகிகளுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்காமல் நிர்வாகிகளை அலைக்கழிக்கும் திமுகவினருக்கு அப்பகுதியில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post