காஞ்சிபுரம் அருகே, மீனவர்களின் மானிய விலை டீசலை முறைகேடாக விற்ற தி.மு.க நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கானத்தூர் அருகே, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வணிக வாகனத்தில் இருந்த டீசலை, சிலர் டேங்கர் லாரியில் நிரப்ப முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, டீசலுடன் இருந்த வாகனம் மற்றும் டேங்கர் லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நடத்திய தொடர் விசாரணையில், மீனவர்களின் மானிய டீசலை முறைகேடாக விற்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, இடைத்தரகரும், தி.மு.க. பிரமுகருமான செம்மஞ்சேரி குப்பத்தைச் சேர்ந்த சம்பத் மற்றும் ஓட்டுநர், கிளினர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுக பிரமுகர் சம்பத் தலைமறைவாக இருப்பதால், மற்ற இருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Discussion about this post