திமுக ஆட்சிக்காலத்தில் டிஎன்பிஎஸ்சி நியமனத்திற்காக திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கொடுத்த பரிந்துரை கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இனி வரும்காலத்தில் டிஎன்பிஎஸ்சியில் சிறு தவறு கூட நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கூறினார்.
Discussion about this post