திமுகவின் தேர்தல் அறிக்கை காகித பூ என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் தலைவருவமான கிருஷ்சாமியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தாங்கள் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுக தேர்தல் அறிக்கையில் நடக்காதததை அறிவித்துள்ளதாகவும், திமுக தேர்தல் அறிக்கை காகித பூ என்று விமர்சித்த அமைச்சர், இந்த தேர்தலோடு அமமுக விற்கு மூடுவிழா நடத்தி அனைவரும் தாய் கழகத்திற்கு வந்து விடுவிடுவார்கள் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post