திண்டுக்கல் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு திமுக சார்பில் காலண்டர் வினியோகம் செய்ய, சென்ற லாரியை காவல் துறையினர் பிடித்தனர்.
ஆதரிப்பீர் உதயசூரியன் என்ற வாசகங்களை அச்சடித்த காலண்டர்களை வினியோகம் செய்ய திமுகவினர் லாரியில் எடுத்துச் சென்றுள்ளனர். காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த லாரியை பிடித்து சோதனை செய்தனர்.
அதில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட காலண்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து திமுகவினர் காவல் துறையினருடன் கடும் வாக்குவாததில் ஈடுபட்டனர்.
Discussion about this post