திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட முருங்கப்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் ரேஷன் கடை கட்டப்போவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் ரேணுகா கூறியிருந்தார். ஆனால், ரேஷன் கடையை கட்டாமல், கவுன்சிலருக்கு சொந்தமாக உணவகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. கவுன்சிலரின் அராஜக நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ரேணுகா மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post