அராஜகத்திற்கும் வன்முறைக்கும் பெயர் போன திமுகவின் தொண்டர்கள் அப்பாவி மக்களின் பிழைப்பில் கை வைப்பதில் வல்லர்வர்களாக உள்ளனர். திமுகவினரின் தொடர் அட்டூழியம் பொதுமக்களை பாதித்து வரும் நிலையில் அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்
திமுகவினர் ஆட்சியில் இருந்த போதெல்லாம் வன்முறையையும் ரவுடித் தனத்தையும் ஆயுதங்களாக பிரயோகித்து வந்தனர். குறிப்பாக 2006 முதல் 2011 வரை திமுகவினர் செய்த அராஜகங்களை மக்கள் மனதில் இன்னும் நீங்காத வடுவாகவுள்ளது. ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு வன்முறை உச்சகட்டம் பெற்றுள்ளது
2018 ஜூலை 28ஆம் தேதி பிரியாணி கடையில் திமுக பாக்சர் யுவராஜ் நிகழ்த்திய அட்டூழியம் மிகவும் பிரபலம். சென்னை காவிரி மருத்துவமனைக்கு வந்திருந்த திமுகவினர் அப்பகுதியில் இருந்த பிரியாணிக் கடையில் ஓசி பிரியாணிக்காக சண்டை போட்டதுடன், கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினார். இதற்கு பஞ்சாயத்து பேச ஸ்டாலினே நேரில் வந்தார்
2018 செப்டம்பர், 12ல் பெரம்பலூரில் உள்ள பியூட்டிபார்லர் ஒன்றில் திமுக மாவட்ட பிரமுகர் செல்வகுமார், ஈவு இரக்கமின்றி ஒரு பெண்ணை கொடூரமாகத் தாக்கிய ரவுடித்தனம் காண்போர் அனைவரையும் பதைபதைக்க வைத்தது.
வட சென்னை ஆர்.கே நகர் பகுதியில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் சாலையோரமாக பஜ்ஜிக் கடை நடத்தி வருகிறார் தங்கபாண்டியன்… அதே ஆண்டு செப்டம்பர் 15ல், திமுக கட்சியை சேர்ந்தவர்களான கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ் மற்றும் முருகன் ஆகியோர் அந்த கடையில் வடை, பஜ்ஜி சாப்பிட்டுள்ளனர். பின்னர் என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தது…
இதேபோன்று மற்றொரு சம்பவமாக சென்னை ஒய்.எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவுக்கு ஆட்டோவில் வந்த நிர்வாகிகள் பணம் கொடுக்காமல் சென்றனர். காலையில் இருந்து சாப்பிடாமல் ஆட்டோ ஓட்டுயதாக ஆட்டோ ஓட்டுநர் குட்டி பரிதாபமாக கூறுவது காண்போரை கலங்க வைத்துள்ளது. தற்போது இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓசி ஆட்டோ திமுக என்ற பெயரில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது
கட்சியின் பெயரால் சாமானிய மக்களை அச்சுறுத்தி வரும் திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதே நிதர்சனம்.
Discussion about this post