விருதுநகரில் தி.மு.க. கூட்டிய கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மூதாட்டியை தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக, கூட்டத்தில் கலந்துகொள்ள பொதுமக்கள் யாரும் முன்வராத நிலையில், தேநீர், இனிப்புகள் தருவதாகக் கூறி 50க்கும் மேற்பட்டோரை தி.மு.க.-வினர் அழைத்து வந்தனர்.
கிராம சபைக் கூட்டத்திற்கு பின்பு ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து தேநீர், இனிப்பு வகைகள் தராமல், மொத்தமாக கொடுத்தததால், அதை வாங்க ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டுச் சென்றனர். அப்போது, பசியால் இனிப்பு வாங்க வந்த மூதாட்டியின் தலையில் கடுமையாக தாக்கிய தி.மு.க. நிர்வாகி, ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
பசியால் தவித்த மூதாட்டியை அந்த தி.மு.க. நிர்வாகி மீண்டும் தாக்க முற்பட்டதாக தெரிகிறது. தி.மு.க.-வினரின் இந்த அநாகரிகமான செயல் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.
Discussion about this post