திமுகவின் தூண்டுதலின் பேரில் அதிமுக வட்ட செயலாளர் வாடகைக்கு இருந்த கடை இடிப்பு!

திமுகவின் தூண்டுதலின் பேரில், அதிமுக வட்ட செயலாளர் வாடகைக்கு இருந்த கடையை, காவல்துறை உதவியுடன் கடையின் உரிமையாளர் இடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், காந்திநகர் பகுதியில் கரீம் பாஷா என்பவருக்கு சொந்தமான கடையில் அதிமுக வட்ட செயலாளர் ஐயப்பன் கடந்த 60 வருடங்களாக வாடைகைக்கு டீக்கடை மற்றும் பேக்கரி நடத்தி வந்துள்ளார். அவர் சில மாதங்களாக கடைக்கு வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர் அவகாசம் கோரிய நிலையில், திமுகவின் தூண்டுதலின் பேரில் கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் போலீசார் உதவியுடன் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கடையை இடித்துள்ளார்.

Exit mobile version