அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அராஜகம் செய்யும் திமுக! முடக்கப்படும் அதிமுக திட்டங்கள்!

செங்கல்பட்டு கொளவாய் ஏரியை புனரமைக்கும் பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கொளவாய் ஏரி புனரமைப்புத் திட்டம்..!

செங்கல்பட்டு நகர் பகுதியில் 2 ஆயிரத்து 210 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கொளவாய் ஏரி. இந்த ஏரியை புனரமைத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பவும், படகு குழாம், பூங்கா, கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்டவை அமைத்து சுற்றுலாத் தளமாக மாற்றும் வகையிலும் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக 90 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதனால் கொளவாய் ஏரி புதுப்பொலிவு பெற்று ஒரு சுற்றுலாத்தளமாக உருவெடுக்கும் என பொதுமக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடியா திமுக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. வாட்ச் டவர் என்று சொல்லக்கூடிய கண்காணிப்பு கோபுரம் மட்டும் தற்போது அரைகுறையாக கட்டப்பட்டுள்ளது.

கண்டுகொள்ளாத விடியா திமுக..!

செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்ச்சி பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடங்கிவைத்த கொளவாய் ஏரி புனரமைப்பு திட்டத்தை விடியா திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களை ஒவ்வொன்றாக முடக்கி வரும் விடியா திமுக அரசு, தற்போது கொளவாய் ஏரியையும் கை கழுவிவிட்டதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு கொளவாய் ஏரி புனரமைப்பு பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version