திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரங்களில் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருவதாகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள காணையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 794 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 14 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகையினையும், மனைப் பட்டாக்களையும் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தைக் குடிசை இல்லா மாற்ற வேண்டும் என்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 72 ஆயிரத்து 135 வீடுகளுக்கான ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். பசுமை வீடு திட்டத்தின் கீழ் பத்தாயிரத்து 15 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தில், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Discussion about this post