மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
Discussion about this post