திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செய்தியாளர் சந்திப்பில் நிருபரிடமே கேள்வி எழுப்பியும், உளறி கொட்டிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரியில் விவசாய பட்ஜெட் தொடர்பாக 4 மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உளறிக் கொட்டினார்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை பாதுகாப்பாக வைக்க குடோன் கட்டுமானப் பணி குறித்த கேள்விக்கு, நிருபரிடமே கேள்வி எழுப்பிய அமைச்சரின் செயல் நகைப்புக்குள்ளானது.
கெயில் நிறுவனம் தொடர்பான கேள்விக்கு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக திட்டங்களை கொண்டுவருவதே அரசின் முக்கிய நோக்கம் என திமுக அமைச்சர் பதில் அளித்தது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
சத்துணவுத் திட்டத்தில் மாங்கூழ் கொடுக்கும் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “அதுகுறித்து தனக்குதெரியாது என்று அமைச்சர் மறுக்க”, பின்னால் நின்றவரோ செய்தியாளர்களிடம் கேள்விகளை நிறுத்துங்கள் என்று கைகளால் கெஞ்சும் நிகழ்வும் அரங்கேறியது.
மேகதாது அணை கட்டுவேன் என்று கர்நாடக புதிய முதலமைச்சரின் கருத்து குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த திமுக அமைச்சர், “புதிதாக வருபவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் செய்ய முடியாது” என்று தாங்களும் அப்படித்தான் என்பதைப் போல் பதில் அளித்தார்.
கிருஷ்ணகிரியில் விவசாய பட்ஜெட் தொடர்பாக 4 மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உளறிக் கொட்டினார்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை பாதுகாப்பாக வைக்க குடோன் கட்டுமானப் பணி குறித்த கேள்விக்கு, நிருபரிடமே கேள்வி எழுப்பிய அமைச்சரின் செயல் நகைப்புக்குள்ளானது.
கெயில் நிறுவனம் தொடர்பான கேள்விக்கு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக திட்டங்களை கொண்டுவருவதே அரசின் முக்கிய நோக்கம் என திமுக அமைச்சர் பதில் அளித்தது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
சத்துணவுத் திட்டத்தில் மாங்கூழ் கொடுக்கும் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “அதுகுறித்து தனக்குதெரியாது என்று அமைச்சர் மறுக்க”,
பின்னால் நின்றவரோ செய்தியாளர்களிடம் கேள்விகளை நிறுத்துங்கள் என்று கைகளால் கெஞ்சும் நிகழ்வும் அரங்கேறியது.