ஒடிசாவுல நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக, மத்திய அரசை கண்டிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜா, வாண்டடாக வாயைக் கொடுத்து சிக்கியிருக்கிறார்.
திமுக துணைப்பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா, அமைச்சர் பொன்முடிபோல, தேவையற்ற விஷங்களைப் பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது உண்டு. சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசியது ஆ.ராசாவுக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மன்னிப்பு கேட்டு கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வில் பேசியவர், இந்துக்கள் குறித்து பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆ.ராசாவின் துவேஷ பேச்சுக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்பினரும் ஆவேசம் காட்டினர். இப்படி சர்ச்சைகளில் அமைச்சர் பொன்முடியின் சிஷ்யனாக வலம் வரும் ஆ.ராசா, ஒடிசா ரயில் விபத்து குறித்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது வாண்டடாக வாயைக் கொடுத்து சிக்கியிருக்கிறார்.
மத்திய ஆட்சியாளர்கள் விளம்பரம் தேடுவதிலேயே ஆட்சியை ஓட்டுவதாகவும், போதிய கவனம் செலுத்தியிருந்தால் இதுபோன்ற ரயில் விபத்துகள் நடந்திருக்காது என்றும் சாடியவர்,விபத்து நடந்ததன் பின்னர், நடவடிக்கை எடுப்பதை விட அது நடக்காமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
ராஜா எழுப்பிய கேள்விகள் எல்லாம், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த விஷச்சாராய சாவுகளுக்கு காரணமான அலட்சிய விடியா திமுக ஆட்சியை நோக்கி எழுப்பியது போலவே இருந்தது.
ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும், விஷச்சாராயம் குடித்து குற்றமிழைத்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்ததாகவும் வாண்டடாக வாயைக் கொடுத்து வம்பில் சிக்கினார்.
குற்றமிழைத்தவர்களுக்கு 10 லட்சம், குற்றம் இழைக்காத ரயில் பயணிகளுக்கு 5 லட்சமா என்னும் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவரது வாயில் வார்த்தைகள் தந்தி அடித்தது.
ஒடிசா ரயில் விபத்துக்காக நாங்கள் யாரையும் ராஜினாமா செய்ய வற்புறுத்தவில்லை… ஆனால் தமிழகத்தில் பிரச்சனை என்றால், முதலமைச்சரையும், அமைச்சரையும் ராஜினா செய்யச் சொல்கிறார்கள் என்று சொந்தக்கதை சோகக்கதையை புலம்பிய காட்சிகள் இப்போது வைரலாகி வருகிறது.
Discussion about this post