அதிமுக வெற்றிக் கூட்டணியில் தேமுதிக அதிகாரப் பூர்வமாக இணைந்தது. அந்தக் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்கும் என குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டணி ஒரு உணர்ச்சி பூர்வமான கூட்டணி என்றும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் தொகுதிகள் குறித்து வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்றார்.
Discussion about this post