நெல்லை, கோவைக்கு தீபாவளி சிறப்பு ரயில் நாளை இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை, கோவை வழித்தடங்களில் நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி திருநாளையொட்டி சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு, முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை காலை 9.30 மணிக்கு இயக்கப்பட உள்ளது.

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 4 மற்றும் 7-ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை காலை 7.45 க்கு இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து தாம்பரத்திற்கு 4 மற்றும் 7-ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Exit mobile version