நீதிமன்றங்களில் வழக்குகளை சரிபார்க்க எடுத்தால் அதில் முக்கால்வாசி நிறைந்து கிடப்பது விவாகரத்து வழக்குகள் தான். இந்த வழக்குகள் விரைவில் முடிவெடுக்க முடியாமல் காலம் தாழ்த்தும் சூழ்நிலை நீதிமன்றங்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக யோசித்து வந்த உச்சநீதிமன்றம் தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளது.
அதாவது விவாகரத்து பெற விரும்புபவர்களுக்கு 6 மாதம் காலம் அவகாசம் தராமல் அந்த ஜோடியின் திருமணத்தை ரத்து செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கு சட்டபிரிவு 143 ஐ பயன்படுத்தி விவாகரத்து செய்ய முடியும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரியபடுத்தியுள்ளது.