கடலூரில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டம் உச்சிமேடு ஊராட்சி பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் வேண்டுகோள் விடுத்தார்.

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினம் குறித்து விவாதிக்க கிராம சபை கூட்டம், கடலூர் அடுத்த உச்சிமேடு ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பங்கேற்று ஊராட்சி நிர்வாகம் குறித்தும், கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். கிராம சபை கூட்டத்தில் தமிழக அரசு தடை விதித்த 14 வகை பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது, குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மழை நீரை சேமிப்பதற்கு உரிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version