மேட்டூர் அணை டெல்டா மாவட்ட சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீரானது கல்லணையை வந்தடைந்து, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட கிளை ஆறுகளில் திறந்துவிடப்படும். இந்தநிலையில் கல்லணையில், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட துணை ஆறுகளின் முகத்துவாரங்களையும் சர்ட்டர்களையும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது அணைப் பகுதியில் நடைபெற்று வரும் மணல் திட்டுக்களை அகற்றும் பணியை துரிதப்படுத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
Discussion about this post