முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின் படி இலவச உணவு விநியோகம்

முதலமைச்சரின் உத்தரவை தொடர்ந்து, சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை செனாய் நகரில் அண்ணா சமுதாயகூடத்தில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தி.நகர் எம்.எல்.ஏ சத்தியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் 5 லட்சத்து 30 ஆயிரம் குடிசை வாழ் குடும்பங்களில் உள்ள 26 லட்சம் பேருக்கு, 3 வேளையும் ஆரோக்கியமான உணவுகள் வரும் 13 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், முதலமைச்சரின் இந்த உண்ணத திட்டம், இன்று முதல் ஒரு வாரத்திற்கு எந்த தங்கு தடையின்றி செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version