கர்நாடக சட்டமன்ற சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேரும் நேரில் ஆஜராக அவகாசம் கோரி கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேர், நான்கு வார அவகாசம் கோரி தனித்தனியாக பதில் கடிதம் எழுதியுள்ளனர். உங்களை ஏன் தகுதிநீக்கம் செய்யக் கூடாது” என அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதங்கள் மீது 7 நாட்களுக்குள் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம், சம்மன் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டிய தேவை உள்ளதால் உடனடியாக உங்களை இன்று சந்திக்க முடியாது. கூடுதலாக 4 வார கால அவகாசம் தேவை என கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.