பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுவதற்காக, மத்திய அரசால் நடத்தப்படும் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்க, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
“Pariksha Pe Charcha” என்ற நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 16ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்களுடன் உரையாற்ற இருக்கிறார். பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுவதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், நாடு முழுவதும் கட்டுரைப் போட்டித் தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் அரசுப் பள்ளி மாணவ – மாணவிகளைப் பங்கேற்க வைக்க, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, Gratitude is Great, Your Future Depends on Your Aspirations, Examining Exams, Our Duties Your Take, Balance is Beneficial ஆகிய 5 தலைப்புகளில், ஆயிரத்து 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதி www.mygov.in என்ற இணையதளத்தில், வரும் டிசம்பர் 23ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post