தமிழகத்தை நோக்கி 22 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் கஜா புயல் இன்று இரவு 8.30 மணிக்கு அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக கடலுக்குள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த கஜா புயல் தற்போது, 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே புயல் எச்சரிக்கையை முன்னிட்டு நாகை,காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரியில் 9 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8 ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஜாபுயல் காரணமாக பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் 7 கடலோர மாவட்டங்களில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்தில் பயணிக்க வேண்டாம் என போக்குவரத்து துறைக்கு , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Discussion about this post